வெறிநாயால் உயிரிழந்த சப்இன்ஸ்பெக்டர்!

ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் முகமது ரபீக் நாயக், ராம்பன் மாவட்டத்தில் தெருநாய் கடித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ராம்சூவின் பெரிஹிந்தர்-நீல் பகுதியில் வசிப்பவர் ஏஎஸ்ஐ முகமது ரபீக் நாயக். இவர் கடந்த மே 11ம் தேதி ராம்பன் நகரில் பணிபுரியும் போது, தெருநாய்களிடமிருந்து பயணிகளைக் காப்பாற்ற முயன்றார். அப்போது ஒரு தெருநாய் இவரை கடித்துள்ளது. இந்த நாய் நாயக் உட்பட குறைந்தது 10 பேரை கடித்துள்ளது.

முகமது ரபீக் நாயக் வெறிநாய்க்கடிக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டாரா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இச்சூழலில் நாய் கடித்த மூன்று மாதங்கள் கழித்து நேற்று ரேபீஸ் நோய் பாதிப்பு தீவிரமடைந்து அவர் உயிரிழந்ததாக தகவல் வளிவந்துளளது. இறந்தவரின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News