கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒரு பெண், தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கிஷோர் என்ற நபர் அந்த பெண் வீட்டின் கதவு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்துள்ளார்.
பிறகு தூங்கி கொண்டிருந்த பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னை விட்டு விடும்படி அழுதுள்ளார்.
அதனை பொருட்படுத்தாத கிஷோர், அப்பெண்ணை நிர்வாணமாக தனது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினரிடம் கூறியுள்ளார். அந்த பெண்ணின் உறவினர்கள் கிஷோரை பிடித்து சின்ன சேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தனர்.