சேலம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் ஏவிஆர் ரவுண்டானா அருகே பிரபல மயூரா தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகள் இங்கு நின்று உணவு அருந்துவது வழக்கம் அந்த வகையில் ஒரு தனியார் ஆம்னி பேருந்து நின்றது அதிலிருந்து ஒரு பெண் பயணி ஒருவர் கீழே இறங்கி கழிவறைக்கு சென்றார் இதனையடுத்து அவர் திடீரென அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார் கழிவறைக்குள் செல்போன் இருப்பதாகவும் அதன் மூலம் வீடியோ பதிவு செய்வதாகவும் ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து சூரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பார்த்தனர் அப்பொழுது ஹோட்டலில் உள்ள கழிவறையில் மேல் பகுதியில் துணியில் சுற்றியபடி செல்போன் ஒன்று இருப்பதும் அதனை எடுத்து பார்த்த போது அந்த செல்போனில் வீடியோ பதிவாகி கொண்டிருப்பது தெரிய வந்தது சுமார் இரண்டு மணி நேரம் அந்த செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது விசாரணையில் கழிவறையில் தூய்மை பணியாளராக சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் செல்போனை கழிவறையில் வைத்து தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது அந்த செல்போனில் பெண்களின் வீடியோ ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அவர் வேறு ஏதேனும் வீடியோ வைத்துள்ளாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் கழிவறையில் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.