பெரம்பலூர் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில், செஞ்சேரி என்ற இடத்தில், பைக் மீது, டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(24), என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இவரது மனைவி ரேணுகா(20), படுகாயம் அடைந்து முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இருவரது சடலத்தையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.