2 கோடி ரூபாயால் உருவான தனித்துவ பிள்ளையார்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூருவில் உள்ள விநாயகர் கோவில் ஒன்று 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகருக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் பெங்களூருவில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட.

பெங்களூரின் ஜே.பி.நகரில் உள்ள ஸ்ரீ சத்ய கணபதி கோவில் முழுதும், 10 – 20 – 50 – 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அலங்காரத்தில் நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அலங்கரிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.2.18 நாணயங்களின் மதிப்பு, 70 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது இப்படி தனித்துவமான முறையில் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீ சத்ய கணபதி கோவில் நிர்வாகம், ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தியுள்ளது.இவ்வாறு அலங்காரம் செய்ய மூன்று மாதங்கள் தேவைப்பட்டதாக கோவில் அறங்காவலர் தெரிவித்துள்ளார். பண்டிகை முடிந்தவுடன், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

RELATED ARTICLES

Recent News