பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

எடப்பாடி அருகே ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சின்னமுத்தூரில் இயங்கிவரும் ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உள்ளனர். இவர்கள் எடப்பாடி மற்றும் ரெட்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வேன் மூலம் மாணவ, மாணவிகள் காப்பகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சின்னமுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த 45-க்கும் மேற்பட்ட சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.