விநாயகர் ஊர்வலம்.. திடீரென வெடித்த கலவரம்..

இந்து கடவுள்களில் ஒருவரான விநாயகரின் பிறந்த நாள் என்று கூறப்படும் விநாயகர் சதுர்த்தி, கடந்த 7-ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு தெருக்களில் உள்ள இளைஞர்கள், பெரிய அளவில் விநாயகர் சிலைகளை வைத்து, அந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு பூஜை செய்யப்படும் சிலைகள், 3-ல் இருந்து 7 நாட்கள் கழித்து, கடல் அல்லது வேறு ஏதாவது நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நீர்நிலைகளுக்கு எடுத்து செல்லும்போது, அந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

இவ்வாறு கொண்டு செல்லும்போது, சில சமயங்களில் வன்முறை வெடிக்கும் சம்பவங்களும், ஆங்காங்கே நடக்கும். அந்த வகையில், கர்நாடகாவின் மண்டியா பகுதியில், விநாயகரின் சிலை, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அப்போது, திடீரென சில மர்ம நபர்கள், செருப்பை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால், அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

இதையடுத்து, விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றவர்கள், காவல்நிலையம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தை அறிந்த சிலரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்துக் கொண்டு, தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News