ஆந்திர மாநிலம் என்டி ராமராவ் மாவட்டம் முல்லப்பாடு கிராஸ் ரோடு அருகே வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. விபத்தில் காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
செல்ப் டிரைவிங்கில் வாடகை காரில் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மின்சார கம்பத்தில் மோதி கார் தீப்பற்றி எரிந்தததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.