Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

மகள் தற்கொலை.. துக்கம் தாங்க முடியாமல் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்ட தாய்..

தமிழகம்

மகள் தற்கொலை.. துக்கம் தாங்க முடியாமல் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்ட தாய்..

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் திவ்யா. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 9-ஆம் தேதி அன்று, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மகள் உயிரிழந்த துக்கத்தால், திவ்யாவின் தாய் ராதிகா, தினமும் சோகத்திலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று துக்கத்தின் உச்சிக்கு சென்ற அவர், உடலில் பெட்ரோலை ஊற்றி, தன்னைத் தானே எரித்துக் கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், ராதிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் உயிரிழந்த துக்கம் தாக்க முடியாமல், தாயும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top