பொதுவாக தனது படங்களில், கதைக்கு அதிக முக்கியத்துவம் தரும் பா.ரஞ்சித், அவரது அரசியலை, ஒரு தனி லேயராக தான் வைத்திருப்பார். பெரும்பாலும், ரசிகர்களின் முயற்சியால் தான், அவரது படங்களில் உள்ள குறியீடுகள் கண்டறியப்படும்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில், பலரும் பேச தயங்கும், ஒரு முக்கியமான அரசியலை, வெளிப்படையாகவே காட்சிகளாக வைத்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு அம்சங்கள் அந்த திரைப்படத்தில் உள்ள நிலையில், பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், தங்கலான் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில், வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அதனை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்காவிட்டால், படத்திற்கு தடை விதிக்கக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்றும், அவர் கூறியுள்ளார்.