காரில் ஸ்டண்ட் செய்ய முயன்ற 17 வயது சிறுவன் – எதிரே வந்த பெண் பலி

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் 17 வயது சிறுவன் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிரே ஸ்கூட்டியில் வந்த பெண் மீது வேகமாக மோதியது. இதில் அந்த பெண்ணும் அவரது மகளும் தூக்கி வீசப்பட்டனர்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சிறுவனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் ஸ்டண்ட் செய்வதற்காக சிறுவன் காரை ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News