கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். இவருக்கும், சீர்காழி பகுதியை சேர்ந்த பிரவீனாவிற்கும், 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பரசுராமன் புதுக்கோட்டையில் தங்கி வேலை பார்த்து வருவதால், பிரவீனா தனது மாமியார் மற்றும் மாமனார் உடன், ஒரே வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரவீனா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிரவீனாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகிய 18 மாதங்களிலேயே இளம்பெண ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.