குடியாத்தம் அருகே, விபத்துக்களை தடுப்பதற்காக, சாலையோரம் தடுப்புச் சுவரை கட்டித்தர வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இவரது இறுதி சடங்கில் கலந்துக் கொள்வதற்காக, உறவினர் சுமதி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்துள்ளார்.
இதையடுத்து, இன்று வீட்டிற்கு திரும்பிய அவர்கள், குடியாத்தம் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், படுகாயம் அடைந்த சுமதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், அப்பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருவதால், சாலையோரம் தடுப்புச் சுவரை கட்டித்தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.