Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

இயங்கிக் கொண்டிருந்த பேருந்து.. திடீரென இறங்கிய மாணவி.. சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி..

இந்தியா

இயங்கிக் கொண்டிருந்த பேருந்து.. திடீரென இறங்கிய மாணவி.. சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி..

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் மெஹ்ரீன். இவர், நேற்று மாலை பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

மதுராநகர் பகுதி வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது, ஓடும் பேருந்தில் இருந்து, அவர் திடீரென இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறிய மெஹ்ரீன், கீழே விழுந்து, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மெஹ்ரீனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலன் இன்றி, மருத்துவமனையிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More in இந்தியா

To Top