பைக் வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் நந்தகுமார் (22) அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது தந்தையிடம் ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வேண்டும் என கேட்டுள்ளார். கூலித் தொழிலாளியான தன்னால் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி தர முடியாது என அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த நந்தகுமார், எலிபெஸ்ட் வாங்கி அதனை மில்க் ஷேக்கில் கலந்து குடித்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நந்தகுமாரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் கோவிந்தராஜ் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.