டெல்லியின் கீர்த்தி நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் மெட்ரோ ரெயில் புறப்பட்டது. அந்த ரயில் ஷதிபூர் பகுதிக்கு ரயில் சென்ற போது மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.
இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்திய ஓட்டுநர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றினர். பின்னர், அந்த இளம்பெண்ணை டெல்லி மெட்ரோ ரெயில் போலீசிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.