குளிர்சாதான பெட்டியில் பழுது பார்த்து போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!

தி.நகர் ராம்தாஸ் தெருவை சேர்ந்தவர் பிரேம் குமார் (26) குளிர்சாதன பெட்டி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

இவர் தாம்பரம் மெப்ஸ் பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பனியில் கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களுடன் ஏசி பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஆக்.19) வழக்கம் போல் பழுது பார்த்து கொண்டிருந்த போது கீழே சிலர் வெல்டிங் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழுது பார்த்து கொண்டிருந்த குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பிரேம் குமார் தூக்கி வீசபட்டார்.

இதனை கண்ட சக தொழிலாளர்கள் பிரேம் குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சமபவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News