வேண்டுதல் நிறைவேறாததால் ஆத்திரத்தில் கோயில் சிலைகளை சேதப்படுத்திய இளைஞர்..!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இரண்டு சிவன் கோயில்களில் சில நாள்களுக்கு முன் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சில அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் ஒரே இளைஞர் தான் அந்த இரு கோயில்களிலும் சிலைகளை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுபம் கைத்வாஸ் என்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருப்பதால் அது சரியாக வேண்டும் என அந்த கோயில்களில் தொடர்ச்சியாக வழிபாடு செய்துள்ளார். தனது நீண்ட கால பிரார்த்தனை நிறைவேறாத விரக்தியில் தான் இதை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து காவல்துறை அவர் மீது 295ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News