அஜித்தின் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில், மீனா, சிம்ரன், ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் ஷூட்டிங், வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அதிரடி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, குட் பேட் அக்லியின் ஷூட்டிங், வரும் மே 2 வது வாரத்திலேயே நடத்த ஆதிக் திட்டமிட்டுள்ளாராம். இதனால், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்படும் என்று அப்படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விடாமுயற்சி ஷூட்டிங் நீண்டுக் கொண்டே செல்வதால் தான், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.