ஆதிபுருஷ் படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

பாகுபலி படத்திற்கு பிறகு, மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்களில் தான் நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். ஆனால், பாகுபலி படம் மட்டும் தான் பெரிய வெற்றியை பெற்றது. மற்ற திரைப்படங்கள் அனைத்தும், பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றன.

சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள், ரசிகர்களின் பொறுமையை பெரிதளவில் சோதித்தது. இதனால், பெரும் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள், ஆதிபுருஷ் படமாவது ஹிட்டாக வேண்டும் என்று எதிர்பார்த்துக்கிடந்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறது. பார்ப்பதற்கு பொம்மை படம் போல் உள்ளது என்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த டீசரை பார்த்த பிறகு, பிரபாஸின் அடுத்த திரைப்படமும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.