மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ளனர்.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் தற்போது ரூ. 100 கோடியை நெருங்கியுள்ளது.
பிரமயுகம், ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் என தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் மலையாள திரையுலகின் வரிசையில் தற்போது ஆடு ஜீவிதம் இடம்பிடித்துள்ளது.