மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், கடந்த மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.16 கோடி வசூல் செய்தது. மொத்தமாக இப்படம் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலை கடந்து சாதனைப் படைத்தது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.