மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியானது.
இந்நிலையில் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.7.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ.15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.