மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். பல்வேறு சிறந்த படைப்புகளை கொடுத்து வரும் இவர், தற்போது ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை, ப்ளெஸ்ஸி தான் இயக்கி வருகிறார். மார்ச் 28-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை, படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இருக்கையின் நுனியில் அமரவைக்கும் அளவிற்கு பரபரப்பாக நகரும் இந்த படத்தின் டிரைலர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் வெளியான பிறகு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு, முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. மலையாளம் மட்டுமின்றி, தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிகளில், இப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.