ஆலம்பனா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! காரணம் என்ன?

வைபவ், பார்வதி நாயர், முனிஷ்காந்த், ரோபோ ஷங்கர், திண்டுக்கல் ஐ லியோணி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆலம்பனா.

வரம் கொடுக்கும் பூதத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், 15-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, படத்தை திட்டமிட்டப்படி படக்குழுவினரால் வெளியிட முடியவில்லை. இந்நிலையில், இதற்கான காரணம் குறித்து, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது, குழந்தைகள், குடும்பங்களுக்கு ஏற்ற வகையில், இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. எனவே, திரைப்படத்தின்‌ வெளியீடு அதற்கு பொருத்தமான தேதியில்‌ மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News