ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா. அந்த தொடரில் நடித்தபோது நெருங்கி பழகி வந்த இருவரும், காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
தொடர்களில் நடிப்பது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் இருவரும் ஆர்வமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், ஆல்யாவும், சஞ்சீவும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், சினிமா பாடல் ஒன்றிற்கு ரெமான்டிக்காக இந்த ஜோடி நடனம் ஆடியுள்ளது. வீடியோவின் இறுதியில், ஆல்யா மானசா தனது கணவருக்கு லிப்-லாக் தருவது போல் வந்து, பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.