தலைநகர் டெல்லியில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவுகள், வரும் 8-ஆம் தேதி அன்று வெளியாகவும் உள்ளது. தேர்தல் நடத்தப்படுவதற்கு, இன்னும் சில நாட்களே இருப்பதால், பிரச்சாரம் நடத்துவதற்கான பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே உள்ள மும்முனை போட்டி, யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி, செய்தியாளர்களை இன்று சந்தித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில், 60 இடங்களை, ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று தெரிவித்தார். ஆனால், மின்னனு வாக்குப்பதிவு சாதனங்களில், மோசடி செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகவும், அதற்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், இளைஞர்கள் கொண்ட குழுமை அமைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.