டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது. காலை முதலே, பாஜக தான் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இவ்வாறு இருக்க, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள், பல்வேறு இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம். அதாவது, புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், 430 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லியின் முதலமைச்சர் அதிஷி, 3 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மால்வியா நகர் தொகுதியில் போட்டியிட்ட சோம்நாத் பார்தி, 5 ஆயிரத்து 656 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். ஷகூர் பச்தி தொகுதியில் போட்டியிட்ட சத்யேந்தர் ஜெயின் 15 ஆயிரத்து 745 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.