நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில், நேற்று முன்தினம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும், குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனது தனிப்பட்ட விருப்பத்திற்காக தான், திருமண உறவில் இருந்து விலக வேண்டும் என ஜெயம் ரவி முடிவு செய்தார் என்று ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், என் நடத்தையின் மீது பொதுவெளியில் நடத்தப்படும் மறைமுக தாக்குதல்களை சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும், இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும், அவர் கூறியுள்ளார். இவரது இந்த அறிக்கை, இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.