Connect with us

Raj News Tamil

விஜயின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை மிஸ் பண்ண அபாஸ்.. இவர் தான் ஹீரோவே?

சினிமா

விஜயின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை மிஸ் பண்ண அபாஸ்.. இவர் தான் ஹீரோவே?

தமிழ் சினிமாவில் ஜாக்லேட் பாய் ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் அபாஸ். ஒருசில வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், அதன்பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், சினிமாவில் இருந்து விலகினார்.

இந்நிலையில், விஜயின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தில், முதன்முதலில் அபாஸ் தான் நடிக்க இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விஜய், ஷாலினி ஆகியோர் நடிப்பில், ஃபாசில் இயக்கத்தில், கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை.

அன்றைய காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில், அபாஸ் தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம். ஆனால், சில காரணங்களால், அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

More in சினிமா

To Top