தமிழ் படங்களுக்கு மதிப்பு தரும் அபிஷேக் பச்சன்!

மதுமிதா இயக்கத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் கேடி என்கிற கருப்பு துரை. 77 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்காட்டும் விதமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த திரைப்படம், தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மதுமிதா தான் இந்த படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், 77 வயது முதியவர் கதாபாத்திரத்தில், அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோன்று, பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திலும், இவர் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News