நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சமீப காலங்களாக, இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவி வந்தது.
இவ்வாறு பரவி வரும் தகவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, நடிகை ஐஸ்வர்யா ராய், நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவருக்கு, திரைபிரபலங்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
ஆனால், அவரது கணவர் அபிஷேக் பச்சன், இதுவரை எந்தவொரு வாழ்த்து செய்தியையும் வெளியிடவில்லை. இதனால், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்று, இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.