அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்!

பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தனியார் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பேருந்தை உள்ளூர் மக்களே மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த பாலத்தில் நின்று கடலின் அழகை ரசிக்காலம். ராமேஸ்வரம் சுற்றுலா செல்லும் பயணிகள் கடலின் அழகை ரசித்து செல்வார்கள். இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த தனியார் பேருந்தும் அரசு பேரும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாம்பன் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் கவனம் சிதறுவதாகவும், பதற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற விபத்துக்களை தவிர்க்க சுற்றுலா வாகனங்கள் பாலத்தில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.