பள்ளி பேருந்தில் ஆசிட் கசிவு: 15 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்களை‌ அழைத்து சென்று கொண்டிருந்தது.

அப்பேருந்தில் பள்ளி கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட் வைத்திருந்துள்ளனர். பள்ளி பேருந்து அம்சாகுளத்தை கடக்கும்போது திடீரென ஆசிட் கசிந்தது பேருந்து ஓட்டுனர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பேருந்தை நேராக பள்ளிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 18 பள்ளி மாணவ மாணவிகள் சின்னசேலம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.‌இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News