தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் மே 22ம் தேதி துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்துவைத்தது. இதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் , 17 காவல் அதிகாரிகள், 3 வருவாய் துறை அதிகாரிகள் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News