அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஒப்புதல், நவ.13ஆம் தேதி வழங்கியுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை மூலம் விவரம் வெளியாகியுள்ளது.