சமந்தாவின் யசோதா படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியானது..!

சமந்தா, வரலட்சுமி சரத்குமார்,முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் யசோதா. ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் உருவாகிவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தமிழ் உள்ளிட்ட 5- மொழிகளில் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் கர்பிணித் தாய்மார்கள் குறித்து பேசத்தொடங்கிய சமந்தா, யாசோதானா யாருன்னு தெரியுமா என ஆக்ரோஷமாக பேசுவதுவரை நீள்கிறது இப்படத்தின் ட்ரெய்லர். வித்யாசமான கருவை கொண்டு உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர்,வாடகைத்தாய் முறையைப்பற்றி பேசும் என தெரிகிறது.

மேலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 11-ஆம் தேதி வெளியாகிறது.