பார்ப்பதற்கு செம ஸ்டைல்.. ஒரு லிட்டருக்கு 100 கி.மீ மைலேஜ்.. ஆனா ஒரே ஒரு பிரச்சனை.. ஆக்டிவா 7ஜி சிறப்பு அம்சங்கள்..

இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சந்தையில் முன்னணியில் இருப்பது ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா நிறுவனம். வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு மாடல் பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் உருவாக்கிய இந்நிறுவனம், ஆக்டிவா என்ற ஸ்கூட்டர் மூலம், மக்களிடம் பெருமளவில் வரவேற்பை பெற்றது.

நல்ல மைலேஜ், பார்ப்பதற்கு நல்ல ஸ்டைலாக வந்திறங்கிய ஆக்டிவா, சாமானிய மக்களிடமும், வியாபார ரீதியிலான பயன்பாட்டாளர்களிடமும், நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த ஸ்கூட்டரின் நியூ வெர்ஷனான, ஆக்டிவா 7ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்கூட்டர் 1 லிட்டருக்கு 100 கி.மீ மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, இந்த ஸ்கூட்டருக்கென மோட்டாரில் புதிய முயற்சி கையாளப்பட்டுள்ளது. வண்டியை ஸ்டார்ட் செய்து, 10 கி.மீட்டரில் இருந்து 40 கி.மீட்டர் வேகத்திற்குள் செல்லும்போது, எலக்ட்ரிக் இன்ஜின் செயல்படுமாம்.

40 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும்போது, பெட்ரோல் இன்ஜின் பயன்படுமாம். இதன்காரணமாக, கூடுதலாக 40 கி.மீட்டருக்கான மைலேஜ் தாராளமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தனை நல்ல அம்சங்கள் இருப்பினும், இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News