சினிமா
கழிவறையில் இறந்து கிடந்த பிரபல பாலிவுட் நடிகர்..! போதை பொருள் காரணமா??
இந்தி திரையுலகில் பிரபல இளம் நடிகராக இருந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத். இவர் மும்பை நகரில் அந்தேரி பகுதியில் உள்ள 11-வது மாடியில் வந்தார். இந்நிலையில் இன்று கழிவறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து ஆதித்யா சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதிக அளவில் போதை பொருள் எடுத்து கொண்டதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியை சேர்ந்த ஆதித்யா, ‘கிராந்திவீர்’ மற்றும் ’மைனே காந்தி கோ நஹி மாரா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சுமார் 300 விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஆதித்யா சிங் அவருடைய வீட்டின் கழிவறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற செய்தி பாலிவுட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
You must be logged in to post a comment Login