Connect with us

Raj News Tamil

மெசேஜ் லிங்க்கை க்ளிக் செய்து ரூ.1.50 லட்சத்தை இழந்த பிரபல நடிகர்

இந்தியா

மெசேஜ் லிங்க்கை க்ளிக் செய்து ரூ.1.50 லட்சத்தை இழந்த பிரபல நடிகர்

வங்கியில் இருந்து KYC(Know Your Custimer) மெசேஜ் வந்தால் அதில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்துவிடாதீர்கள். அப்படி லிங்க்கை க்ளிக் செய்தால் மோசடி ஆட்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துவிடுவார்கள் என அவ்வப்போது எச்சரிக்கை விளம்பரங்கள் வருகிறது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அஃப்தாப் ஷிவ்தசானிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று KYC மெசேஜ் வந்துள்ளது. அதில் KYC தொடர்பான விபரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும். இல்லை என்றால் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

இதையடுத்து மெசேஜில் இருந்த லிங்க்கை க்ளிக் செய்திருக்கிறார். அதன் பிறகு அவர் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.50 லட்சம் போய்விட்டது.

இந்த சம்பவம் குறித்து மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அஃப்தாப் ஷிவ்தசானி. அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top