Connect with us

Raj News Tamil

நடிகரும், இயக்குநருமான சூரிய கிரண் காலமானார்..!!

சினிமா

நடிகரும், இயக்குநருமான சூரிய கிரண் காலமானார்..!!

படிக்காதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கவனம் பெற்ற சூரிய கிரண் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48.

மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சூரியகிரண் நடித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு நடிகை கல்யாணியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா இவரது தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூரிய கிரண் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top