பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆர்ம்ஸ்டராங்கின் படுகொலை குறித்து, இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுக அரசுக்கு எதிராக, பல்வேறு கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார்.
இவரது இந்த பதிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், திமுகவின் ஆதரவாளரும், நடிகருமான போஸ் வெங்கட், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அண்ணனை இழந்த வேதனையில், பா.ரஞ்சித் அவ்வாறு பதிவிட்டுள்ளார் என்றும், மற்றபடி, அவர் வைத்த குற்றச்சாட்டுகளை அவரே திரும்பப் பெற்றுக் கொள்வார் என்றும், கூறப்பட்டுள்ளது.
இவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இது பா.ரஞ்சித்துக்கு விடுக்கும் மறைமுக மிரட்டலா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரும்பாலும், போஸ் வெங்கட்டுக்கு எதிராகவே தான், நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.