மெய்யழகன் படம்.. கண்ணீர் வடித்த பிரபல நடிகர்!

பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், மிகுந்த உணர்வபூர்வமான திரைப்படம் என்றும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அனுபம் கெர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மெய்யழகன் திரைப்படத்தை பார்த்ததாகவும், அந்த திரைப்படம் தன்னை கண்ணீர் வடிக்க வைத்ததாகவும், இது மிகவும் எளிய, அழகிய திரைப்படம் என்றும், தெரிவித்துள்ளார்.

மேலும், கார்த்தி, அரவிந்த்சாமி, படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோரையும், அவர் பாராட்டியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News