Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

“பலகோடி பேருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்” – புகழ்ந்து தள்ளிய நடிகர் அனுபம் கேர்! யாரை சொல்றாரு இவரு?

இந்தியா

“பலகோடி பேருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்” – புகழ்ந்து தள்ளிய நடிகர் அனுபம் கேர்! யாரை சொல்றாரு இவரு?

வி.ஐ.பி, லிட்டில் ஜான், கணெக்ட் உள்ளிட்ட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும், பல்வேறு இந்தி, ஆங்கில திரைப்படங்களிலும் நடித்தவர் அனுபம் கேர். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஒரு நேர்மையான மனிதன், மிகவும் நேர்மையாக இருக்கக் கூடாது என்று, நான் சில நேரங்களில் யோசிப்பேன். நேராக வளர்ந்த மரம் தான், முதலில் வெட்டப்படும்.

நேர்மையான மனிதன் தான், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது.

பல்வேறு தடைகள் இருந்தாலும், அவர் தன்னுடைய நேர்மையை கைவிடவில்லை. அதனால் தான், பலகோடி மக்களுக்கு அவர் முன்மாதிரியாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், யாரை பற்றிய பதிவு இது என்பதை, அனுபம் கேர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், உத்தரபிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் முடிவுகள் குறித்த தங்களது பார்வையையும், நரேந்திர மோடிக்கான தங்களது ஆதரவையும் நீட்டித்தும், கமெண்ட்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top