Connect with us

Raj News Tamil

மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய அஜித்! AK வேற லெவல்!

சினிமா

மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய அஜித்! AK வேற லெவல்!

புதியதாக சினிமாவில் அறிமுகமாகும் கலைஞர்களை, ஏற்கனவே சாதித்த கலைஞர்கள் பாராட்டுவது, தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடக்கும் ஒரு விஷயம்.

அந்த வகையில், நடிகர் அஜித், விஜயின் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு, அதில் நடித்த நடிகர் ஒருவரை பாராட்டியுள்ளார்.

அதாவது, விஜயின் மாஸ்டர் படத்தில், தாஸ் என்ற கதாபாத்திரத்தில், அர்ஜூன் தாஸ் நடித்திருப்பார். இந்த படத்தில், இவரது நடிப்புத் திறமையை பார்த்த அஜித், அவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பான தகவலை, அர்ஜூன் தாஸே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதற்கு முன்னர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில பிரபலங்களையும், நடிகர் அஜித் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top