விஜய்க்கு வில்லனாக நடிக்கும் அர்ஜுனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 0க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதில் விஜய்க்கு வில்லனாக விஷாலை நடிக்க வைக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தனக்கு கைவசம் படங்கள் உள்ளதால் விஷால் அதனை நிராகரித்து விட்டார்.

விஷாலுக்கு பதிலாக அர்ஜூனை வில்லனாக நடிக்க வைக்க அவரை அணுகியுள்ளனர். வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்த நடிகர் அர்ஜூன் 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.

இதுவரை அர்ஜுன் நடித்த படங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை தாண்டியது இல்லை. இந்நிலையில் விஜய் படத்தில் வில்லனாக நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறாராம் அர்ஜூன்.