தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் கவின். இவரது நடிப்பில், சமீபத்தில் வெளியான லிப்ட் திரைப்படமும், டாடா திரைப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இவருக்கு கிடைத்த படவாய்ப்பு, தற்போது குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கு கிடைத்துவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கவின் நடிப்பில் ஊர் குருவி என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக, அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் ட்ராப் செய்துள்ளது. தற்போது, இந்த படத்தை வேறொரு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதில், கவினுக்கு பதில் அஸ்வின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.