திடீர் உடல் நலக்குறைவால் நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல நடிகர் பாலா கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து பிரபல இயக்குனரும், பாலாவின் உடன் பிறந்த சகோதரருமான சிறுத்தை சிவா கொச்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் பாலா தமிழில் காதல் கிசுகிசு, அன்பு, போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

RELATED ARTICLES

Recent News