சிகிச்சைக்கு பிறகு அடையாளமே தெரியாமல் போன நடிகர் பாலா..! வைரலாகும் போட்டோ

தமிழில் வெளியான அன்பு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாலா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்திலும் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார்.

நடிகர் பாலா உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த மாதம் 7 ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

தற்போது பாலா தனது மனைவி எலிசபெத்துடன் சிரித்தபடி புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் உடல்எடை குறைந்து ஆளே மாறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News