பிரிந்த மனைவியுடன் ஒன்று சேர்ந்த அஜித்தின் தம்பி?

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், முதன்முதலில் உருவான திரைப்படம் வீரம். இந்த படத்தில், அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தவர் பாலா.

இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், எலிசபெத் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால், திருமணமாகிய 1 வருடத்திற்குள்ளாகவே, கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பாலா நடித்த மலையாள படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதனை திரையரங்கில் பார்ப்பதற்கு, அவரும், அவரது மனைவி எலிசபெத்தும் ஒன்றாக சென்றுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், இவர்கள் மீண்டும் இணைந்துவிட்டனர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.